என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சட்டமன்ற தேர்தல்
நீங்கள் தேடியது "சட்டமன்ற தேர்தல்"
ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடை செய்ய வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. #SC
புதுடெல்லி:
பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் அஸ்வினி குமார் உபாத்யாயின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அவரது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது.
ஒரு நபர் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் அவர், அவற்றில் ஒரு தொகுதியில் இருந்து விலகவேண்டியுள்ளது. இதனால் அரசுக்கு வீண் செலவும், உழைப்பு வீணடிப்பும் ஏற்படுகிறது. வெற்றிபெற்ற ஒரு வேட்பாளர் ராஜினாமா செய்வது அவருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு அநீதி அளிப்பதாகவும் உள்ளது என மனுதாரர் கூறியுள்ளார். #SC

அடுத்த சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார். ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். #TNpolls #Rajinikanth
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தற்போது நடைபெறும் 22 சட்டசபை தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகி ஆளும்கட்சியின் பலம் குறைந்து சட்டசபை தேர்தல் நடந்தால் நீங்கள் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘அடுத்த சட்டப்பேரவை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார். “அடுத்த ஓட்டு ரஜினிக்கே” ஹேஷ்டேக் போட்ட ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன்’ என்றார்.
மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? என்ற கேள்விக்கு மே.23-ல் பதில் தெரிந்துவிடும் என அவர் குறிப்பிட்டார். #TNpolls #Rajinikanth

தேர்தல் ஆணையம் கடந்த முறையை விட இந்த முறை சிறப்பாக பணியாற்றியுள்ளது.
மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா? என்ற கேள்விக்கு மே.23-ல் பதில் தெரிந்துவிடும் என அவர் குறிப்பிட்டார். #TNpolls #Rajinikanth
விஜயகாந்த் முதல் தேர்தலிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக வாக்குகளை பெற்று திரும்பி பார்க்க வைத்ததை போல கமல்ஹாசனும் முத்திரை பதிப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. #KamalHaasan #Vijayakanth
சென்னை:
சினிமாவில் இருந்து அரசியல் களத்துக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றனர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும். இவர்களுக்கு பின்னர் பல சினிமா நட்சத்திரங்கள், அரசியலில் குதித்திருந்தாலும் யாரும் நிலைக்கவில்லை.
அதே நேரத்தில் கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த், அரசியல் களத்தில் வேகமாக முன்னேறினார். கட்சியை தொடங்கிய அடுத்த ஆண்டே 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தனி ஆளாக விஜயகாந்த் களம் இறங்கினார். அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. கணிசமான ஓட்டுகளை அள்ளியது. விருத்தாச்சலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி அனைவரின் புருவங்களையும் உயரச் செய்தார்.
முதல் தேர்தலிலேயே தே.மு.தி.க. வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்று ஆச்சரியப்படுத்தினர். இதுவே 2006-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்ததாக கூறப்பட்டது.
இதன் பின்னர் 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் எட்டிப் பிடித்தார்.
இதன் மூலம் தே.மு.தி.க., 2-வது தேர்தலிலேயே 16 அடி பாய்ந்தது.
இதன் பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி உதயமான மக்கள் நலக் கூட்டணி மண்ணை கவ்வியது. 2 தேர்தல்களில் ஏறுமுகமாக இருந்த விஜயகாந்தின் செல்வாக்கு 2016-ம் ஆண்டு தேர்தலில் அடியோடு சரிந்தது. அதில் இருந்து மீள்வதற்கு விஜயகாந்த் போராடிக் கொண்டிருக்கிறார்.
தேர்தல் களத்தில் கமலின் இந்த முடிவு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயகாந்த் முதல் தேர்தலிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக வாக்குகளை பெற்று திரும்பி பார்க்க வைத்ததை போல கமல்ஹாசனும் முத்திரை பதிப்பாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கமல்ஹாசனை பொறுத்த வரையில், புதிய கட்சியை தொடங்கிய பின்னர் கிராமப்புறங்கள் தொடங்கி, நகர்ப் பகுதிகள் வரையில் பொதுமக்களை சந்தித்து பேசியுள்ளார். இது அவருக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது.
புதிய வாக்காளர்களான இளைஞர்கள் நிச்சயம் மாற்றத்தை விரும்பி, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் என்பதே கமலின் நம்பிக்கையாக உள்ளது. இது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை.
பாராளுமன்ற தேர்தல் களத்தில் 40 தொகுதிகளிலும் பம்பரமாய் சுழன்று பிரசாரம் செய்ய கமல் திட்டமிட்டுள்ளார்.
இந்த பிரசாரத்தின் போது அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்து பேசவும் கமல் முடிவு செய்துள்ளார். அ.தி.மு.க., தி.மு.க. 2 கட்சிகளையும் ஊழல் கட்சி என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் கமல், தேர்தல் களத்தில் அதனை வேகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.
விஜயகாந்த் சந்தித்த முதல் தேர்தல் சட்டமன்ற தேர்தல். ஆனால் கமல் சந்திப்பதோ பாராளுமன்ற தேர்தல். மாநில கட்சியாக இருக்கும் மக்கள் நீதி மய்யம், பா.ஜனதா, காங்கிரஸ் கூட்டணிகளை கடுமையாக விமர்சனம் செய்யும் அதே வேளையில் புதிய மாற்றத்துக்காக எங்களை ஆதரியுங்கள். “நாளை நமதே” என்கிற கோஷத்துடன் பிரசாரம் செய்ய உள்ளார்.
மத்தியில் யாருக்கு ஆதரவு? யார் பிரதமர்? என்பது போன்ற விஷயங்களை பற்றி பிரசாரத்தின் போது கமலால் பேச முடியாது என்பது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும் பாராளுமன்ற தேர்தல் களம் நிச்சயம் கமலுக்கு கடும் சவாலாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
முதல் தேர்தலிலேயே விஜயகாந்த் முன்னுக்கு வந்ததை போல கமலும் கவனிக்கப்படும் புதிய அரசியல்வாதியாக அவதாரம் எடுப்பாரா? இந்த கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Vijayakanth

கட்சியை தொடங்கி ஓராண்டில் விஜயகாந்த் சட்டமன்ற தேர்தலை சந்தித்தது போல கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தலை தனியாக சந்திக்கிறார்.
தேர்தல் களத்தில் கமலின் இந்த முடிவு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயகாந்த் முதல் தேர்தலிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக வாக்குகளை பெற்று திரும்பி பார்க்க வைத்ததை போல கமல்ஹாசனும் முத்திரை பதிப்பாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கமல்ஹாசனை பொறுத்த வரையில், புதிய கட்சியை தொடங்கிய பின்னர் கிராமப்புறங்கள் தொடங்கி, நகர்ப் பகுதிகள் வரையில் பொதுமக்களை சந்தித்து பேசியுள்ளார். இது அவருக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது.
புதிய வாக்காளர்களான இளைஞர்கள் நிச்சயம் மாற்றத்தை விரும்பி, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் என்பதே கமலின் நம்பிக்கையாக உள்ளது. இது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை.
பாராளுமன்ற தேர்தல் களத்தில் 40 தொகுதிகளிலும் பம்பரமாய் சுழன்று பிரசாரம் செய்ய கமல் திட்டமிட்டுள்ளார்.
இந்த பிரசாரத்தின் போது அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்து பேசவும் கமல் முடிவு செய்துள்ளார். அ.தி.மு.க., தி.மு.க. 2 கட்சிகளையும் ஊழல் கட்சி என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் கமல், தேர்தல் களத்தில் அதனை வேகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.
விஜயகாந்த் சந்தித்த முதல் தேர்தல் சட்டமன்ற தேர்தல். ஆனால் கமல் சந்திப்பதோ பாராளுமன்ற தேர்தல். மாநில கட்சியாக இருக்கும் மக்கள் நீதி மய்யம், பா.ஜனதா, காங்கிரஸ் கூட்டணிகளை கடுமையாக விமர்சனம் செய்யும் அதே வேளையில் புதிய மாற்றத்துக்காக எங்களை ஆதரியுங்கள். “நாளை நமதே” என்கிற கோஷத்துடன் பிரசாரம் செய்ய உள்ளார்.
மத்தியில் யாருக்கு ஆதரவு? யார் பிரதமர்? என்பது போன்ற விஷயங்களை பற்றி பிரசாரத்தின் போது கமலால் பேச முடியாது என்பது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும் பாராளுமன்ற தேர்தல் களம் நிச்சயம் கமலுக்கு கடும் சவாலாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
முதல் தேர்தலிலேயே விஜயகாந்த் முன்னுக்கு வந்ததை போல கமலும் கவனிக்கப்படும் புதிய அரசியல்வாதியாக அவதாரம் எடுப்பாரா? இந்த கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Vijayakanth
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு என்று ரஜினிகாந்த் இன்று தெரிவித்துள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram #LSPolls
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் குதித்து மக்கள் பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அரசியல் ரீதியாக விமர்சனமும் செய்து வந்தார்.
அரசியல் ஈடுபாடு காரணமாக தனது ரசிகர்கள் மன்றங்களை ஒருங்கிணைத்து ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி நிர்வாகிகளை நியமித்தார்.
அடிக்கடி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். ஆனால் முறைப்படி கட்சி தொடங்காமல் தாமதித்து வந்தார்.
அரசியல் ஈடுபாட்டுடன் புதியதாக சினிமா படங்களையும் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.
பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர இருப்பதால் ரஜினிகாந்த் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்று எதிர் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் அவசர ஆலோசனை நடத்தினார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை, எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை, சட்டசபை தேர்தலே இலக்கு என்று கூறி உள்ளார்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு.
நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ மன்றத்தின் கொடியோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரசாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது.
தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர். வர இருக்கும் தேர்தலில், மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக் கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#Rajinikanth #RajiniMakkalMandram #LSPolls

ரஜினிகாந்த் தனது அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலியாக டெல்லியில் இன்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். #AssemblyPollResults #Modi #BJPMPs
புதுடெல்லி:
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
தெலுங்கானாவில் மிகப்பெரும் சக்தியாக உருவாக வேண்டும் என்ற கனவும் நனவாகிப்போனது. அங்கு முன்பு 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பா.ஜனதா இந்த தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மிசோரமிலும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அங்கு மிசோரம் தேசிய முன்னணியிடம் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
பா.ஜனதா ஆட்சியை பறிகொடுத்த 3 மாநிலங்களில் உள்ள 65 நாடாளுமன்ற தொகுதிகளில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பா.ஜனதா 62 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. எனவே இந்தி பேசும் இந்த 3 பெரிய மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி பா.ஜனதாவுக்கு வருகிற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.
இதன் எதிரொலியாக பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சுமார் 7 மணி நேரம் ஆலோசனை நடந்தது. இதனைத் தொடர்ந்து பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் வாரந்தோறும் கட்சி எம்.பி.க்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுவது வழக்கம். இதில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றியே ஆலோசிக்கப்படும்.
ஆனால் இன்றைய எம்.பி.க்கள் கூட்டத்தில் 5 மாநில தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பிரசாரத்துக்கு தயாராவது குறித்து மோடி எம்.பி. க்களுக்கு ஆலோசனை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து இன்று மதியம் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, கட்சியின் தேசிய நிர்வாகிகள், மாநில தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டத்தை நடத்த இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இது தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே திட்டமிடப்பட்ட கூட்டம் தான் என்றும், கட்சிரீதியான பிரச்சினைகள் குறித்து தலைவர்களின் கருத்துகளை அமித்ஷா கேட்க இருப்பதாகவும் நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் டுவிட்டரில், “வெற்றி தோல்வி என்பது வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதி தான். இந்த முடிவுகளால் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதிலும், மக்களுக்கு சேவையாற்றுவதிலும், இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதிலும் பா.ஜனதா மேலும் கடுமையாக பாடுபடும். இந்த தேர்தல் முடிவை கட்சி பணிவுடன் ஏற்றுக்கொள்கிறது” என்று தெரிவித்து இருந்தார். #AssemblyPollResults #Modi #BJPMPs

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட இன்றே, 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது. #SamajwadiParty #MadhyaPradeshPolls
போபால்:
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஸ் யாதவ் முன்னர் தெரிவித்திருந்தார்.
இதனால், அதிருப்தியடைந்துள்ள அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கூட்டணிக்காக இனியும் காத்திருக்க முடியாது, 4 மாநில தேர்தலை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சந்திக்க முடிவு செய்திருப்பதாக இன்று பரபப்பு பேட்டியளித்திருந்தார்.
இதன் அடுத்தகட்டமாக, மத்திய பிரதேச மாநிலத்தின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். சித்தி மாவட்டம் சித்தி 77 தொகுதியில் கே.கே. சிங் என்ற வேட்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல், பரஸ்வடா மாவட்டம் பாலகட் 110 தொகுதியில் கன்கர் முன்ஜார் போட்டியிடுவதாகவும், பாலகட் 111 தொகுதியில் அனுபா முன்ஜார் என்பவரும், நிவாரி பகுதியின் டிகம்பர் 46 தொகுதியில் மீரா யாதவ்வும், பன்னா பகுதியின் பன்னா 60 தொகுதியில் தர்ஷத் சிங் யாதவ்வும், புத்னி பகுதி செஹோர் 156 தொகுதியில் அசோக் ஆரியா ஆகியோரை வேட்பாளர்களாக நியமித்து சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #SamajwadiParty #MadhyaPradeshPolls

ஆனால், இந்த 4 மாநிலங்களுடன் சேர்த்து தெலங்கானா மாநிலத்திற்கும் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சியுடன் இன்னும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.
இதனால், அதிருப்தியடைந்துள்ள அகிலேஷ் யாதவ் காங்கிரஸ் கூட்டணிக்காக இனியும் காத்திருக்க முடியாது, 4 மாநில தேர்தலை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து சந்திக்க முடிவு செய்திருப்பதாக இன்று பரபப்பு பேட்டியளித்திருந்தார்.
இதன் அடுத்தகட்டமாக, மத்திய பிரதேச மாநிலத்தின் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். சித்தி மாவட்டம் சித்தி 77 தொகுதியில் கே.கே. சிங் என்ற வேட்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல், பரஸ்வடா மாவட்டம் பாலகட் 110 தொகுதியில் கன்கர் முன்ஜார் போட்டியிடுவதாகவும், பாலகட் 111 தொகுதியில் அனுபா முன்ஜார் என்பவரும், நிவாரி பகுதியின் டிகம்பர் 46 தொகுதியில் மீரா யாதவ்வும், பன்னா பகுதியின் பன்னா 60 தொகுதியில் தர்ஷத் சிங் யாதவ்வும், புத்னி பகுதி செஹோர் 156 தொகுதியில் அசோக் ஆரியா ஆகியோரை வேட்பாளர்களாக நியமித்து சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #SamajwadiParty #MadhyaPradeshPolls
வருகிற சட்டமன்ற தேர்தல் தி.மு.க.வுக்கு கடைசி வாய்ப்பு என்று வேலூரில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன் கூறினார். #DMK #DuraiMurugan
திருப்பத்தூர்:
ஜோலார்பேட்டையில் வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது:-
வேலூர் மேற்கு மாவட்டத்தில் 4 தொகுதிகளில் தி.மு.க. பின்தங்கிய நிலையில் உள்ளது. கட்சி நிர்வாகிகளிடம் ஒற்றுமை இல்லாததே இதற்கு காரணம்.
இதனால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் ஒற்றுமையுடன் செயல்பட்டு இங்குள்ள 4 தொகுதிகளையும் மீட்டு வெற்றி பெற செய்ய வேண்டும்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அண்ணா, கருணாநிதி போல ஸ்டாலின் வெற்றி பெற்றார் என்பார்கள், தோல்வியடைந்தால் தி.மு.க. கதை முடிந்துவிட்டது என பேசுவார்கள்.
இது வாழ்வா? சாவா? பிரச்சினை வரும் தேர்தல் தி.மு.க.வுக்கு கடைசி வாய்ப்பு கட்சிக்கு உழைக்காதவர்கள் யாராக இருந்தாலும் நீக்கப்படுவார்கள்.
குட்கா விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் விரைவில் ஜெயிலுக்கு போவார்கள். இந்த விவகாரத்தை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் ஸ்டாலினை பார்த்து பயப்படுகின்றனர்.
அ.தி.மு.க., பா.ஜனதா தவிர மற்ற கட்சியினர் அனைவரும் ஸ்டாலினை முதல்-அமைச்சராக ஏற்றுக்கொண்டு விட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
அண்ணா, கருணாநிதி, காமராஜர் ஆகிய 3 பேரின் முகங்களை ஸ்டாலின் வடிவில் பார்க்கிறேன். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆடிக்காற்றில் வந்தவர் காற்று நின்றதும் தானாக கவிழ்ந்து விடுவார் என்றார். #DMK #DuraiMurugan

பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் தனி கூட்டணி அமைத்து சந்திப்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார். #TTVDhinakaran
ஆலந்தூர்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதாவினர் ஊழல் செய்யாதவர்கள் போல பேசி வருகிறார்கள். அவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் தமிழ்நாட்டில் பா.ஜனதா கால் ஊன்றவும், நிர்மலா சீத்தாராமனை தமிழக முதல்-அமைச்சராக்கவும் திட்டமிடுகிறார்கள். ஓ.பி.எஸ். சகோதரருக்காக ராணுவ விமானம் கொடுத்தது பற்றி மத்திய மந்திரிதான் விளக்க வேண்டும்.
அம்மா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ். முதல்-அமைச்சர் ஆனார். அதற்கு காரணமான வரையே காட்டிக் கொடுத்தார். அம்மா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்கு காரணமாக இருந்து அம்மாவின் மரணத்தையே அசிங்கப்படுத்தினார்.
ஓ.பி.எஸ். சொத்து குவிப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் அவருடைய வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறும். பல உண்மைகள் அம்பலமாகும்.
இதுபோல், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்ற அமைச்சர்கள் பற்றியும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் பல உண்மைகள் மக்களுக்கு தெரிய வரும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனக்கு 3-வது இடம் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், அதை முறியடித்து எனது தொண்டர்களின் உழைப்பால் மிகப்பெரிய வெற்றியை பெற்றேன். வருகிற பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு உள்ளது.
பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் தனி கூட்டணி அமைத்து சந்திப்போம். இதில் எங்களுடன் பல கட்சிகள் இணைந்து செயல்படும்.
நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். சட்டசபை தேர்தலில் எங்களுக்கு 200 இடங்கள் கிடைக்கும். கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி காட்டுவோம்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. எனவே, இதில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran

தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் ஓ.பி.எஸ். எந்த துரோகமும் செய்வார். யாரையும் காட்டிக் கொடுப்பார். அதுபோல்தான் ராணுவ விமானம் கொடுத்து உதவி செய்தவரை காட்டிக் கொடுத்து இருக்கிறார்.
ஓ.பி.எஸ். சொத்து குவிப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் அவருடைய வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறும். பல உண்மைகள் அம்பலமாகும்.
இதுபோல், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்ற அமைச்சர்கள் பற்றியும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் பல உண்மைகள் மக்களுக்கு தெரிய வரும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனக்கு 3-வது இடம் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், அதை முறியடித்து எனது தொண்டர்களின் உழைப்பால் மிகப்பெரிய வெற்றியை பெற்றேன். வருகிற பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு உள்ளது.
பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் தனி கூட்டணி அமைத்து சந்திப்போம். இதில் எங்களுடன் பல கட்சிகள் இணைந்து செயல்படும்.
நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். சட்டசபை தேர்தலில் எங்களுக்கு 200 இடங்கள் கிடைக்கும். கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி காட்டுவோம்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது. எனவே, இதில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran
பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராகி வருகிறது. இதற்காக உயர்மட்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசு அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டு வருகிறது.
இதற்கு அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது தமிழகம் உள்பட சில மாநிலங்களில் ஆட்சிகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. இதனால் மேலும் 3 ஆண்டு காலம் பதவி பறிபோவதால் அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது.
ஆனால் மத்திய அரசு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் உறுதியாக உள்ளது. அதனால் பாராளுமன்ற தேர்தல் நடக்கும்போது சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.
இதுபற்றி நேற்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். மேலும் டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடத்துவதற்கு பா.ஜனதா அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் எனவே பிரச்சனைகளுக்காக குரல் எழுப்ப வேண்டும். மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளில் எந்த சமரசமும் செய்து கொள்ள வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பா.ஜனதா அணியில் இணையலாம் என்று சிலரும், பா.ஜனதா அணியில் இணையக்கூடாது சிலரும், ஜெயலலிதா பாணியில் தனித்தே போட்டியிட வேண்டும் என்றும் பெரும்பாலானவர்களும் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து தேர்தல் கூட்டணி உள்பட முக்கிய விஷயங்களில் முடிவுகள் எடுக்க உயர்நிலை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரது கருத்துக்களை பெற்று உயர்நிலைக் குழுவானது முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.
சமீப காலமாக பா.ஜனதாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் உறவு சுமூகமாக இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசு மிகவும் காலதாமதம் செய்து விட்டதாக அ.தி.மு.க. தரப்பில் கருத்து நிலவுகிறது.
இதே போல் நீட் தேர்வு விஷயத்திலும் தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. இது மக்கள் மத்தியில் தமிழக அரசு மீது அதிருப்தி ஏற்படச் செய்துள்ளது.
மேலும் தமிழகத்தில் நடைபெறும் தொடர்ச்சியான வருமான வரி சோதனைகளும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இவற்றுக்கெல்லாம் மேலாக ஊழலில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருப்பதாக அமித்ஷா பேசிய பேச்சு அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜனதா நிர்வாகிகள், மத்திய மந்திரிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார்கள். எனவே கூட்டணி தொடர்பான அ.தி.மு.க. நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து நிலவுகிறது.
கூட்டத்தில் மொத்தம் உள்ள 50 எம்.பி.க்களில் 40 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 3 பேர் தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை சபாநாயகர் தம்பித்துரை, அன்வர் ராஜா, எஸ்.ஆர்.பாலசுப்பிர மணியன், சத்யபாமா உள்பட 8 எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. #ADMK

பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை:
பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தேசிய சட்ட ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.
எதிர்க்கட்சியான தி.மு.க.வும் இதே முடிவை எடுக்க திட்டமிட்டுள்ளது.
இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி, நாடு முழுவதும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்ற தேர்தலும், மாநில அளவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டாலும், சட்டமன்ற தேர்தல் என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது.
பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிக்க ரூ.4 ஆயிரம் கோடி வரையும், சட்டமன்ற தேர்தலை நடத்த சராசரியாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் தலா ரூ.300 கோடி வரையும் செலவு ஆகிறது. ஆனால், பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்தினால் ரூ.4 ஆயிரத்து 500 கோடிதான் செலவாகும் என்று கணிக்கப்பட்டது.
அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டறியும் வகையில், டெல்லியில் தேசிய சட்ட ஆணைய கூட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் கலந்துகொள்வதற்காக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.பி.க்கள் மைத்ரேயன், வேணுகோபால், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.
தேசிய சட்ட ஆணைய கூட்டத்தில் பங்கேற்கும் அவர்கள், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முடிவுக்கு அ.தி.மு.க. தரப்பில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய இருக்கின்றனர். இதற்கிடையே, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் கையெழுத்திடப்பட்ட கடிதம் ஒன்று கடந்த மாதம் (ஜூன்) 29-ந்தேதி தேசிய சட்ட ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், “தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் 2021-ம் ஆண்டு வரை இருக்கிறது. இந்த சூழ்நிலையில், ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்தினால், தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் குறைக்கப்படும். எனவே, ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு அ.தி.மு.க.வின் ஆதரவு இல்லை” என்று எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக, தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க. நாளை (ஞாயிற்றுக்கிழமை) நேரில் கருத்து தெரிவிக்குமாறு தேசிய சட்ட ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. எனவே, இந்த கூட்டத்தில், யார் பங்கேற்பது?, இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த ஆதரவு தெரிவிப்பதா?, எதிர்ப்பதா? என்பதை முடிவு செய்வதற்காக உயர் மட்ட தலைவர்களுடன் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்த இருக்கிறார்.
அனேகமாக, இந்த கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பங்கேற்பார் என தெரிகிறது. தி.மு.க.வும், பாராளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் என்று கூறப்படுகிறது. #ADMK #Election
சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 180 தொகுதிகளை கைப்பற்றுவதற்கான முழு திட்டமும் ரஜினியிடம் இருப்பதாக மக்கள் மன்றத்தின் உயர்மட்ட குழு நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். #Rajinikanth #RajiniMakkalMandram
சென்னை:
ரஜினி மக்கள் மன்றத்துக்கு 150 தொகுதிகளில் செல்வாக்கு உள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளதே என்று நேற்று முன்தினம் பேட்டி அளித்த ரஜினியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அவர், ‘அது உண்மை என்றால் மகிழ்ச்சி தான்’ என்றார். ரஜினி இப்படி கூறினாலும் அவரிடம் 180 தொகுதிகளை கைப்பற்றுவதற்கான முழு திட்டமும் கையில் இருப்பதாக மக்கள் மன்றத்தின் உயர்மட்ட குழு நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 34 சதவீதம் ரஜினி ரசிகர்கள் என்று கூறும் அவர் 15.02 சதவீதம் பேர் புதிய வாக்காளர்கள் என்று புள்ளி விவரத்தையும் தெரிவித்திருக்கிறார்.
இவர்களில் குறைந்தது 10 சதவீத வாக்குகளாவது நமக்கு வர வேண்டும் என்று ரஜினி திட்டமிட்டுள்ளார். 20ல் இருந்து 22 சதவீத வாக்குகள் பிற கட்சிகளில் இருந்து வரும் என எதிர்பார்க்கிறார்.
அப்படி ரஜினி பார்த்தால் குறைந்தது 80 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று ரஜினி மக்கள் மன்றத்தினர் நம்புகிறார்கள். பலமான கூட்டணி, ஓட்டுக்கு பணம் போன்றவை குறுக்கிட்டாலும் கூட குறைந்தது 65 சதவீத வாக்குகளாவது நமக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். 80 சதவீத வாக்குகளுக்கு குறி வைத்து வேலை செய்தால் தான் 60 சதவீத வாக்குகளை பெற முடியும் என்பதே ரஜினியின் கணக்கு. தனித்து போட்டி என்பதை மனதில் வைத்து தான் இந்த திட்டங்கள் எல்லாம் உருவாக்கப்படுகின்றன.
ரஜினியின் கட்சியோடு சில கட்சிகள் கூட்டணி வைத்தால் இந்த வாக்கு சதவீதம் உயரும். எனவே 180 முதல் 200 சீட்டுகள் வரை கண்டிப்பாக வெல்லலாம் என்பதே ரஜினியின் வியூகம். இதற்காக தமிழ்நாடு முழுக்க தொகுதி வாரியான கணக்கெடுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன.
தேர்தல் வரும்போது கட்சி தொடங்குவது தான் நல்லது. இப்போதே கட்சி தொடங்கினால் காலப் போக்கில் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதை வைத்து செல்வாக்கு குறையலாம். ஆனால் இந்த பரபரப்பை அப்படியே கொண்டு சென்று சரியாக தேர்தலுக்கு முன்பு கட்சியை தொடங்குவதே சிறந்தது என்றும் ரஜினி முடிவு செய்துள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram

வரும் சட்டமன்ற தேர்தலில் இறைவன் நினைத்தால் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம் என்று பாளையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் சரத்குமார் பேசினார். #Sarathkumar #Vijayakanth #TNAssemblyElection
நெல்லை:
ச.ம.க. துணை பொதுச் செயலாளர் சுந்தர் இல்ல விழா பாளை மார்க்கெட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. விழாவில் ச.ம.க. தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும். அரசியலிலும், கலைத்துறையிலும் விஜயகாந்த் எனக்கு நண்பர். நான் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவியவர்.
வரும் சட்டமன்ற தேர்தலில் இறைவன் நினைத்தால் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம். தென்காசி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Sarathkumar #Vijayakanth #TNAssemblyElection
ச.ம.க. துணை பொதுச் செயலாளர் சுந்தர் இல்ல விழா பாளை மார்க்கெட்டில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. விழாவில் ச.ம.க. தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு அருதி பெரும்பான்மை இருந்தும் அது தேர்தலுக்கு பிந்தய கூட்டணி என கூறி பா.ஜனதாவை ஆட்சிக்கு அழைத்தது தவறு.
வரும் சட்டமன்ற தேர்தலில் இறைவன் நினைத்தால் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம். தென்காசி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Sarathkumar #Vijayakanth #TNAssemblyElection
×

X